தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 304 காலிப்பணியிடங்கள் – ஆண்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) இருந்து புதிய வேலைவாய்ப்பு முன்னதாக வெளியிட்டது. அதில் நாகப்பட்டின மாவட்ட அலுவலகத்தில் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அவகாசமா நீடிக்கப்பட்டு மீண்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை அடிப்படையாக கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாரு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம்TNCSC
பணியின் பெயர் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர்
பணியிடங்கள்304
கடைசி தேதி10.11.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021:

TNCSC கழகத்தில் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் ஆகிய பணிகளுக்கு என 304 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • பருவகால பட்டியல் எழுத்தர் – 119 பணியிடங்கள்
  • பருவகால உதவுபவர் – 127 பணியிடங்கள்
  • பருவகால காவலர் – 58 பணியிடங்கள்
வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

TNCSC கல்வித்தகுதி :
  • பருவகால பட்டியல் எழுத்தர் – ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பருவகால உதவுபவர் – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • பருவகால காவலர் – அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
TNCSC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்டவாறு ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • பருவகால பட்டியல் எழுத்தர் – ரூ.2,410 + ரூ.4049/- (அகவிலைப்படி)
  • பருவகால உதவுபவர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
  • பருவகால காவலர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 10.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். ஏற்கனவே 05.10.2021 அன்று வரை வழங்கப்பட்ட அவகாசத்தில் பதிவு செய்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை இல்லை.

Download TNCSC Recruitment Notification PDF 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!